தமிழக அரசு நியமித்துள்ள அர்ச்சகர்களை கருவறைக்குள்ளே அனுமதிக்க மறுப்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதை வலியுறுத்தி, வயலூர் கிராமத்தை சேர்ந்த இந்திரா காந்தி என்ற இளம் பெண் வயலூர் முருகன் கோவில் வாசலில் தன்னந்தனியாக நின்று தர்ணா போராட்டம் நடத்தினர்.இதுகுறித்து அந்தப் பெண் கூறுகையில், தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருச்சி குமாரவயலூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நாளை (பிப்-19) புதன்கிழமை காலை கும்பாபிஷேக பெருவிழா நடைபெறுகிறது. இந்நிலையில், தமிழக அரசால் வயலூர் முருகன் கோவிலில் நியமிக்கப்பட்ட அரசு அர்ச்சகர்களான பிரபு, ஜெயபாலன் ஆகியோரை கோவில் கும்பாபிஷேக பெருவிழாவில் பங்கேற்க மறைமுக தடை விதிக்கப்பட்டுள்ளது.இது அப்பட்டமான தீண்டாமை. தமிழுக்கும்- தமிழனுக்கும் தடைவிதிப்பது நியாயமா? முதல்வருக்கு அரசு அர்ச்சகர்கள் எழுதிய புகார் மீது, நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்தார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.

Comments are closed.