இந்திய மொழிகளில் சிறந்த படைப்புக்காக வழங்கப்படும் உயரிய விருது சாகித்ய அகாடமி. சிறந்த கவிதை, நாவல், சிறுகதை, இலக்கிய ஆய்வுகளுக்கு சாகித்ய அகாடமி விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன. அந்த வகையில், 2025-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது ‘தமிழ் சிறுகதைகளின் தடங்கள்’ என்ற நூலுக்காக ச.தமிழ்ச்செல்வனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இவருக்கு ஏற்கனவே சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட இருந்தது. ஆனால் பல்வேறு காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டது. இவ்விருது குறித்து அவர் கூறுகையில், ‘தனக்கு இந்தப் புத்தகத்தை எழுத 2 ஆண்டு காலம் ஆனது. 50-க்கும் மேற்பட்ட கதைகளை வாசித்து இந்த புத்தகத்தை எழுதியிருக்கிறேன்’ என்று தெரிவித்தார். மத்திய அரசு விருதுக்கு தேர்வான அனைவருக்கும், புதுடெல்லியில் மார்ச் 31ம் தேதி நடைபெறும் விழாவில் சாகித்ய அகாடமி விருது வழங்கப்படுகிறது. அதோடு ரூ.1 லட்சம் பரிசுத் தொகையுடன் சான்றிதழும் கேடயமும் வழங்கப்படுகிறது.

Comments are closed.