Rock Fort Times
Online News

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா !

 தென்னக நுகர்வோர் மக்கள் பாதுகாப்பு இயக்கம், திருச்சி பிஷப் ஹீபர் தன்னாட்சி கல்லூரி, நுகர்வோர் மன்றம் இணைந்து கல்லூரி வளாகத்தில் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழாவை நடத்தியது. தென்னக நுகர்வோர் மற்றும் மக்கள் பாதுகாப்பு இயக்க மாநில தலைவர் மனித விடியல் மோகன் தலைமை வகித்தார். திருச்சி-தஞ்சை திருமண்டல பேராயர் சந்திரசேகரன், திருச்சி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தலைவர் காந்தி, சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை துணை தலைவர் ஜெயபாரதி, பிஷப் ஹீபர் தன்னாட்சிக் கல்லூரி முதல்வர் பால் தயாபரன் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர். உணவு பாதுகாப்பு துறை திருச்சி மாவட்ட அலுவலர் ரமேஷ் பாபு, திருச்சி மாவட்ட தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் வெங்கடேசன், தர நிர்ணய விஞ்ஞானி ரமேஷ், கல்லூரி விரிவாக்க புலப்பணிகள் முதன்மையர் ஆனந்த் கிதியோன், திருச்சி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய உறுப்பினர்கள் செந்தில்குமார், சாயீஸ்வரி உள்ளிட்டோர் கருத்துரை வழங்கினர் .மாநிலத் துணைத் தலைவர் கே.கே.கார்த்திக் வரவேற்றார். மாவட்ட நூலக வாசகர் வட்ட தலைவர் கோவிந்தசாமி வாழ்த்தி பேசினார் .உயர்மட்டகுழு செயலாளர் ஜெயராமன், தன்னார்வ சேவை சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் பால் குணா லோகநாதன், தென்னக நுகர்வோர் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் மாநில துணை செயலர்குமார், மாவட்ட தலைவர் முஹம்மது சபி, மண்டல செயலர் பிளட்சாம், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரசன்ன வெங்கடேசன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். சமூக பணி சேவை செய்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்ட ன. பிஷப்ஹீபர் கல்லூரி கன்ஸ்யூமர் கிளப் ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் நன்றி கூறினார். கூட்டத்தில் திருச்சி மாவட்டத்தில் உள்ள ஏரி, குளம், வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். திருச்சி அரியமங்கலம் குப்பை கிடங்கை புறநகர் பகுதிக்கு மாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்