Rock Fort Times
Online News

திருச்சியில் பன்னாட்டு லயன்ஸ் சங்கங்களின் சார்பில் மகளிர் தின விழா… * மாநகராட்சி துணை மேயர் திவ்யா தனக்கோடி பங்கேற்பு!

பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் 324 எப் மாவட்டத்தின் திருச்சி ராயல் லயன்ஸ் சங்கம், திருச்சி மிட் டவுன் லயன்ஸ் சங்கம், திருச்சி ராக் சிட்டி ஷைன் லயன்ஸ் சங்கம், திருச்சி உறையூர் லயன்ஸ் சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய மகளிர் தின விழா திருச்சிராப்பள்ளி தமிழ் சங்கத்தில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி ராயல் லயன்ஸ் சங்கத்தின் சாசன தலைவரும், வட்டார தலைவருமாகிய அரிமா முகமது ஷபி வரவேற்று பேசினார். திருச்சி ராயல் லயன்ஸ் சங்கத்தின் தலைவர் அரிமா பிரசன்ன வெங்கடேசன் தலைமை தாங்கினார். மிட் டவுன் லயன்ஸ் சங்கத்தின் தலைவர் அரிமா பரணிதரன், உறையூர் லயன்ஸ் சங்கத்தின் தலைவர் அரிமா சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக லயன்ஸ் மாவட்டம் 324 எப் மாவட்டம் முதல் பெண்மணி எம். ஜே.எப். லயன் மேரி நிர்மலா சவரி ராஜ், மாவட்ட துணை ஆளுநர் எம். ஜே.எப். லயன் விஜயலட்சுமி சண்முகவேல், திருச்சி மாநகராட்சி துணை மேயர் திவ்யா தனக்கோடி ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு துறைகளில் சாதித்த சுமார் 78 ஆளுமை மிக்க பெண்மணிகளுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தார்கள். முன்னாள் ஆளுநர் எம்.ஜே.எப். லயன் லட்சுமணன் வாழ்த்துரை வழங்கினார். முடிவில் ராக்சிட்டி ஷைன் லயன்ஸ் கிளப் தலைவர் அரிமா மணி நன்றி கூறினார். விழாவில் இயல் நாட்டார் கலை மற்றும் பண்பாட்டு நடுவோம் குழுவினரின் தலைமை பயிற்சியாளர் சந்தியா தலைமையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மாணவிகள் ஸ்சாஷித்தா, தர்ஷினி மணிமாறன் ஆகியோரின் வரவேற்பு நடனங்கள் இடம்பெற்றது. ஜமால் முகமது கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியை அலிபிநிஷா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். விழாவில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்