அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், அயன் தத்தனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராம்சாமி மனைவி அசலாம்பாள்(50). கர்ப்பிணியாக இருந்த இவரது மகள் லலிதா பிரசவத்துக்காக பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த 25 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அன்றே லலிதாவுக்கு குழந்தை பிறந்தது. அவருக்கு உதவியாக தாயார் அசலாம்பாள் மருத்துவமனையில் உடனிருந்தார். இந்நிலையில் பிரசவ வார்டு முதல் தளத்தில் உள்ள கழிவறையில் இன்று நண்பகல் அசலாம்பாள் தூக்கிட்ட நிலையில் சடலமாக கிடந்தார்.
கழிவறையை சுத்தம் செய்யச் சென்ற துப்புரவு பணியாளர்கள் இதைக்கண்டு உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீஸார் அசலாம்பாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Post
1 Comment
Leave A Reply

**mitolyn reviews**
Mitolyn is a carefully developed, plant-based formula created to help support metabolic efficiency and encourage healthy, lasting weight management.