Rock Fort Times
Online News

திருச்சி அருகே நாய்க்குட்டிகளை சுவற்றில் அடித்துக் கொன்ற பெண் மீது நடவடிக்கை பாயுமா?* விலங்குகள் நல ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு!

திருச்சி, கம்பரசம்பேட்டை அருகே தெருவில் சில நாய்க்குட்டிகள் அங்கும், இங்கும் ஓடி திரிந்து விளையாடிக் கொண்டிருந்தன. இதனைப் பார்த்த ஒரு பெண் அந்த நாய்க்குட்டிகளை எடுத்து சுவற்றில் அடித்து கொடூரமாக கொன்றார். இதேபோல, அந்தப் பெண் தனது வீட்டின் அருகே சுற்றிய பசு மாடு மீதும் கம்பால் தாக்கியுள்ளார். அந்தப் பெண், நாய்க்குட்டிகளை கொன்ற வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்க்கும் பலருக்கு நெஞ்சம் பதைபதைக்கிறது. நாய் நன்றியுள்ள பிராணி. அதுவும் குட்டி நாய்களை இப்படியா சுவற்றில் அடித்து கொல்வது என்று அந்தப் பெண்ணை வசைபாடி வருகின்றனர். இதனை பார்க்கும் விலங்குகள் நல ஆர்வலர்கள் கல்நெஞ்சம் படைத்த அந்த பெண்ணுக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்