Rock Fort Times
Online News

திருச்சியில் போலீசார் எச்சரிக்கையை மீறி “வீலிங்” செய்த வாலிபர் மீது நடவடிக்கை பாயுமா? ( வீடியோ இணைப்பு)

திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சில வாலிபர்கள் தங்களது இருசக்கர வாகனங்களில் முக்கிய சாலைகளில் சாகசங்களில் (வீலிங்) ஈடுபட்டு வருகின்றனர். இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன் வாகன விபத்துகளும் ஏற்படுகின்றன. சமீபத்தில் கொள்ளிடம் பாலத்தில் சாகசத்தில் ஈடுபட்ட ஒரு வாலிபர் கைது செய்யப்பட்டு எச்சரிக்கை செய்யப்பட்டு அனுப்பப்பட்டார். மேலும், இதுபோன்று சாகசங்களில் ஈடுபடுபவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், அந்த எச்சரிக்கையை மீறி இளைஞர்கள் சிலர் சாகசம் செய்து சமூக வலைத்தளங்களில் அதை வீடியோவாக பதிவிட்டு வருகின்றனர். அந்தவகையில் திருச்சியில் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் அருகே இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் சாகசத்தில் ஈடுபட்டு அதனை வீடியோவாக பதிவு செய்து உள்ளார்.அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தநிலையில்
சாகசத்தில் ஈடுபட்ட அந்த வாலிபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்