Rock Fort Times
Online News

திருச்சி ராக்சிட்டி மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சார்பில் மனைவி நல வேட்பு தின விழா…!

உலக சமுதாய சேவா சங்கம் அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி மனைவி அருள் அன்னை லோகாம்பாள் தியாகத்தை போற்றும் வகையிலும், பெண்ணின் பெருமையை போற்றும் வகையிலும் அன்னையின் 111 -வது பிறந்தநாள் விழா மனைவி நல வேட்பு விழாவாக ஆகஸ்ட் 30-ம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதனை சிறப்பிக்கும் வகையில் திருச்சிராப்பள்ளி ராக்சிட்டி மனவளக்கலை மன்ற அறக்கட்டளை, திருச்சியில், 31-08 -2025, ஞாயிற்றுக்கிழமை, தேவதானம், பாரதி தெருவில் உள்ள ஏ. பி.மஹாலில், முப்பெரும் விழாவாக நடத்தியது. இந்த விழாவில் 150- க்கும் மேலானவர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ஆழியாறு விஷன் இயக்குனர் அருள்நிதி டாக்டர் கே.பெருமாள் கலந்து கொண்டு 70 தம்பதியர்களுக்கு மாதுளை, ரோஜா மலருடன் காந்த பரிமாற்ற தவ சிறப்பு நிகழ்வினை நடத்தி கொடுத்தார்.

இந்த விழாவில் சிறப்பு தம்பதியர்களாக திருச்சி ராக்போர்ட் டைம்ஸ் வாரஇதழ் முதன்மை செய்தி ஆசிரியர் எஸ்.ஆர்.லெக்ஷ்மி நாராயணன்- எல்.கிருத்திகா, தேவதானம் லோட்டஸ் பிரைமரி பள்ளியின் தாளாளர் பூபதி-சுந்தரி தம்பதியரும், லயன் அருள்நிதி வி.ரவிச்சந்திரன்- தேன்மொழி ஆகியோர் கலந்து கொண்டனர். அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர்கள் அருள்நிதி. வி.சுரேஷ்குமார், ஜெ.ஆனந்தராஜ், பி.கணபதி, பி.ஆர்.ஓ. ஆர்.திவாகர் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர். முன்னதாக அருள்நிதி எஸ்.கவுசல்யாதேவி இறை வணக்கம் பாடினார். முடிவில் அறக்கட்டளை துணைத் தலைவர் அருள்நிதி செந்தில்குமார் நன்றி கூறினார். ரேடியோ ஜாக்கி தனுஜா பரமேஸ்வரன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்