Rock Fort Times
Online News

அமித்ஷா தமிழகம் வருகை எதற்காக? – சீமான் சொல்வதென்ன?

திருச்சியிலிருந்து சென்னை செல்வதற்காக விமான நிலையம் வந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகத்திற்கு வந்ததற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கும். அதிமுக -பாஜக கூட்டணியில் மேலும் சில கட்சிகளை இணைப்பது தொடர்பாக பேச அவர் தமிழகத்திற்கு வந்திருக்கலாம் என நான் நினைக்கிறேன்.நான் முருகனுக்கு விழா நடத்தும்போது விமர்சனம் செய்தார்கள். ஆர்.எஸ்.எஸ்,பா.ஜ.க ஒவ்வொரு பகுதியிலும் கடவுளை வைத்து அரசியல் செய்கிறார்கள். கேரளாவில் ஐயப்பனை தொட்டார்கள், ராமரை தொட்டார்கள். ராமர் கோவில் கட்டிய பிறகு ஒடிசாவில் பூரி ஜெகன்நாதரை தொட்டார்கள். தற்போது தமிழ்நாட்டில் வந்து முருகனை தொட்டுப் பார்க்கிறார்கள். பல ஆண்டுகளாக தமிழர்களின் கடவுளாக இருக்கக்கூடிய முருகன் இதற்கு முன்பு அவர்கள் கண்ணுக்கு தெரியவில்லை. நாங்கள் வழிபட்ட கடவுள்களை நீங்கள் எடுத்துக் கொண்டீர்கள்.அது எங்களுக்கு மகிழ்ச்சி தான்.டாஸ்மாக் மதுபான பாட்டில்களை பாதுகாக்க கிடங்குகள் கட்டப்பட்டது போல் நெல்களை பாதுகாக்க கிடங்குகள் கட்டப்பட்டுள்ளதா?. இதுபோன்ற அநீதியான ஆட்சியாளர்களுக்கு மீண்டும், மீண்டும் வாக்களிக்கும் மக்களும் இதற்கு பொறுப்பு என்று கூறினார்.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்