தமிழகத்தில் இன்னும் 7 மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், செப்டம்பர் 13ல் தனது தேர்தல் பரப்புரையை தொடங்கினார். அந்த வகையில், கடந்த வாரம் சனிக்கிழமை திருச்சி, அரியலூர் மாவட்டங்களில் அவர் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டார். அதிகப்படியான தொண்டர்கள் வருகையால் பெரம்பலூர் மாவட்டத்தில் திட்டமிடப்பட்டிருந்த அவரது பரப்புரை ரத்து செய்யப்பட்டது. இதனால், வரும் வாரங்களில் ஒருநாளில் இரண்டு மாவட்டங்களில் மட்டும் விஜய் பரப்புரை மேற்கொள்ளும் வகையில் அவரது பயண திட்டம் மாற்றியமைக்கப்பட்டது. அதன்படி இன்று(20-09-2025) நாகை, திருவாரூர் மாவட்டங்களில் அவர் பரப்புரை மேற்கொள்கிறார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்த அவர், காரில் நாகை சென்றடைந்தார். தொடர்ந்து நாகை ரவுண்டானா பகுதியில் மக்களிடம் பேசிய அவர், நான் இப்போ எந்த மண்ணில் இருந்து பேசுகிறேன் தெரியுமா? நாகூர் ஆண்டவர் குடியிருக்கும் மண்ணில் இருந்து பேசுகிறேன். வேளாங்கண்ணி ஆசியோடு இங்கு வந்துள்ளேன். எப்போதும் மீனவனுக்கு நண்பனாக இருக்கும் விஜய், உங்களை பார்க்க வந்திருக்கிறேன்.
உழைக்கும் மக்கள் இருக்கும் ஊர் தான் நாகப்பட்டினம் மாவட்டம். மதவேறுபாடு இல்லாத மதச்சார்பின்மைக்கு எடுத்துக்காட்டாய் விளங்கும் நாகை மக்களுக்கு சிரம் தாழ்ந்த ஸ்பெஷல் வணக்கம். என்றும் மீனவர்கள் நண்பன் நான். மீன் ஏற்றுமதியில் 2-வது இடம் வகிக்கும் நாகப்பட்டினத்தில் மீன்பிடி துறைமுகத்தில் எந்த வசதியும் செய்யப்படவில்லை. மீனவர்களுக்காக குரல் கொடுப்பதும் அவர்களுடன் துணை நிற்பதும் நமது கடமை. இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து நான் பேசியது குற்றமா? மீனவர்களுக்காக குரல் கொடுக்கும் சமயத்தில் நம் தொப்புள்கொடி உறவான ஈழத்தமிழர்களுக்காகவும் குரல் கொடுப்பது கடமை. நாகப்பட்டினத்தில் ஏற்பட்ட முன்னேற்றத்திற்கு எங்கள் ஆட்சி தான் சாட்சி என அடுக்குமொழியில் பேசுகின்றனர். ரொம்ப அதிகமாக குடிசைப்பகுதிகள் இருக்கும் இடம் தான் நாகப்பட்டினம். இலங்கை கடற்படையால் நமது மீனவர்கள் தாக்கப்படுவதை மதுரை மாநாட்டில் பேசி இருந்தேன். அது தவறா? .14 ஆண்டுகளுக்கு முன் நாகப்பட்டினத்தில் பொதுக்கூட்டம் நடத்தினேன்.இந்த விஜய் களத்திற்கு வருவது ஒன்று புதுசு இல்லை. முன்னாடி விஜய் மக்கள் இயக்கம் என்று வந்து நிற்போம். இப்பொழுது தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் இயக்கமாக வந்து நிற்கிறோம். அவ்வளவு தான் வித்தியாசம். இது புரிய வேண்டியவர்களுக்கு புரிந்தால் சரி. ஒட்டுமொத்த தமிழகத்துக்கான முதலீடா? உங்கள் குடும்பத்தோட முதலீடு வெளிநாட்டிற்கு போகுதா?. பிரசாரத்துக்கு எத்தனை இடையூறுகள்? அஞ்சு நிமிஷம் தான் பேசணும்; பத்து நிமிஷம் தான் பேசணும் என்று. நான் பேசுவதே 3 நிமிடம். அதில் அதனை பேசக் கூடாது, இதனை பேசக்கூடாது என்றால் நான் எதை தான் பேசுவேன்? பிரதமர் வந்தால் இத்தனை கட்டுப்பாடுகள் இருக்குமா? பிரசாரம் சென்றால் மின்தடை செய்கின்றனர். ஸ்பீக்கர் வயரைக் கட் பண்ணுறாங்க, மக்களைப் பார்த்து சிரிக்கக்கூடாது, மக்களைப் பார்த்து கையசைக்கக்கூடாது எனக் கட்டுப்பாடுகள். எங்களுக்கு மட்டும் அதிகக் கட்டுப்பாடுகள் விதிக்கிறார்கள். மீண்டும் தடைகள் போட்டால் மக்கள் அனுமதி பெற்று பிரசாரத்திற்கு வருவேன். மீண்டும் சொல்கிறேன். வருகிற சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கும் த.வெ.க.வுக்கும் தான் போட்டி. இவ்வாறு அவர் பேசினார். பின்னர் திருவாரூர் தேர்தல் பிரச்சாரத்திற்கு புறப்பட்டு சென்றார்.
Comments are closed.