தெலுங்கானா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் அண்மையில் நடந்து முடிந்தது. இதில் தெலுங்கானா , ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ஆகிய 4 மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் முடிவுகள் நாளை ( 03.12.2023 ) காலை முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. ராஜஸ்தானிலும், சத்தீஸ்கரிலும் தற்போது காங்கிரஸ் ஆட்சியில் இருக்கிறது. மத்தியபிரதேசத்தில் பாஜக ஆட்சியில் இருக்கிறது. தெலுங்கானாவில் பி.ஆர்.எஸ்.கட்சி ஆட்சியில் இருக்கிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை காலை 8 மணி முதல் எண்ணபட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. மதியம் 12 மணிக்குள் பெரும்பாலான தொகுதிகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டு விடும் என்று எதிர்பார்க்கப்படுவதால் இந்த 4 மாநிலங்களிலும் யார் ஆட்சி அமைக்க போகிறார்கள் என்பது தெரிந்துவிடும். மிசோரம் மாநிலத்திற்கான வாக்கு எண்ணிக்கை திங்கட்கிழமை ( 04.12.2023 ) நடைபெறுகிறது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.