திருச்சி, பஞ்சப்பூர் பேருந்து நிலையம் எப்போது பயன்பாட்டுக்கு வரும்- அமைச்சர் கே.என்.நேரு சொல்வதென்ன?…
திமுக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு திருச்சியில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
மத்திய பாஜக அரசு அமலாக்கத் துறையை வைத்து மிரட்டி பார்த்தார்கள். அமலாக்கத்துறை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் எங்களுக்கு நியாயம் வழங்கி உள்ளது. தி.மு.க.வில் சிறு, சிறு பிரச்சனைகள் இருந்தால் அதை நாங்களே தீர்த்து கொள்வோம். டெல்டா மாவட்டங்களில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் திமுக தான் வெற்றி பெறும். ஸ்டாலின் தான் மீண்டும் முதலமைச்சராவார். பஞ்சப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த பேருந்து முனைய பராமரிப்புக்காக ஜூன் 17ம் தேதி டெண்டர் விடப்படும். அதன்பின்பு அந்த பேருந்து நிலையம் செயல்பாட்டிற்கு வரும். மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, அனைத்து பகுதிகளிலும் பணிகளை தொடங்கி செய்து வருகிறோம். யார் முதல்வராக வரவேண்டும் என மக்கள் தான் தீர்ப்பு கூற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Comments are closed.