புதிதாக விண்ணப்பித்த மகளிருக்கு உரிமை தொகை ரூ.1000 எப்போது வழங்கப்படும்….* தேதி குறித்தார், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்…!
திருவேற்காடு நகராட்சி சுந்தரசோழபுரத்தில் ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 294 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் முடிவுற்ற கட்டிடங்கள் திறப்பு, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். பின்னர் அவர் திட்டங்களை தொடங்கி வைத்து பேசுகையில், தொடர்ந்து பல கூட்டங்களில் பேசி வருவதால் தொண்டை கட்டி உள்ளது. மூன்று நாட்களுக்கு பேசக் கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தி இருந்தாலும் உங்களிடம் பேச வந்துள்ளேன். திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பயனாளிகளுக்கு இன்று நலத்திட்ட உதவிகள் வழங்கினோம். தமிழகத்தில் ஏராளமான திட்டங்கள் தி.மு.க. ஆட்சியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விடியல் பயணம், காலை உணவுத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த பெண்களுக்கு ஐ.டி.கார்டு கொடுக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் மகளிர் சுய உதவிகுழு பெண்கள் தயாரிக்கும் பொருட்களில் 25 கிலோ வரை அரசு பஸ்களில் 100 கிலோ மீட்டர் வரை கட்டணமின்றி எடுத்து செல்லலாம். இதனால் அவர்களின் லாபம் அதிகரிக்கும். டிசம்பர் 15-ந்தேதி முதல் விடுபட்ட அனைத்து மகளிருக்கும் மாதம் 1000 மகளிர் உரிமைத்தொகை வந்து சேரும். பெண்கள், மாற்றுத் திறனாளிகள், மாணவர்கள் என அனைத்து தரப்பினருக்குமான ஆட்சி திராவிட மாடல் ஆட்சி. இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.