Rock Fort Times
Online News

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் எப்போது முடிவடையும்?* பெரம்பலூர் எம்பி கே.என்.அருண்நேரு கேள்விக்கு மத்திய அரசு பதில்!

மதுரை, தோப்பூர் பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என கடந்த 2018ம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. ஏறத்தாழ 7 ஆண்டுகள் கடந்த பின்னரும் இன்னும் மருத்துவமனை கட்டி முடிக்கப்படவில்லை. இந்நிலையில், டெல்லி நாடாளுமன்ற கூட்டத் தொடரின் போது பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.என்.அருண் நேரு, எப்போது மருத்துவமனை முழுமையாக கட்டி முடிக்கப்படும் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு மதுரை எய்ம்ஸ் திட்ட பணிகள் இதுவரை 42 சதவீதம் நிறைவடைந்திருக்கிறது, அடுத்த ஆண்டு அக்டோபருக்குள் பணியை முடிக்க திட்டமிட்டிருக்கிறோம் எனவும் மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்