Rock Fort Times
Online News

1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வு எப்போது?* அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்…!

தமிழகத்தில் பிளஸ்-2 மாணவர்களுக்கு இன்று( மார்ச் 2) பொது தேர்வு தொடங்கியது. எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு மார்ச் 11ம் தேதி தொடங்குகிறது. அவர்களைத் தொடர்ந்து 1 முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வு எப்போது நடைபெறும் என்று தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி அறிவித்துள்ளார். 10 மற்றும் 12-ம் வகுப்பு பொது தேர்வுகள் நிறைவடைந்த உடன் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு முழு ஆண்டு தேர்வை நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது  .வருகிற ஏப்ரல் மாதம் தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவதால் பள்ளிகளுக்கான முழு ஆண்டு தேர்வினை விரைந்து முடிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஏப்ரல் இரண்டாம் வாரத்திற்குள் அனைத்து வகுப்புகளுக்கும் முழு ஆண்டு தேர்வை முடித்துவிட திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்