Rock Fort Times
Online News

“அப்படி நான் எப்ப சொன்னேன்”- ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிறகு ஓபிஎஸ்…!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஒன்பதாம் ஆண்டு நினைவு நாள் இன்று (05-12-2025) அனுசரிக்கப்படுகிறது. சென்னையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து, ஓபிஎஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், அதிமுக தொண்டர்கள் மீட்பு உரிமை கழகமாக நாங்கள் செயல்பட்டு கொண்டிருக்கிறோம். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் நடந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது. அப்போது தமிழ்நாட்டின் இன்றைய அரசியல் சூழல் குறித்து எடுத்துக் கூறினேன். பிரிந்தவர்கள் ஒன்றுசேர வேண்டும் என்ற நோக்கத்தில் தான் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்தேன். தொண்டர்களின் எண்ணத்தையும் அமித்ஷாவிடம் கூறினேன். பிரிந்திருக்கும் அதிமுக சக்திகள் ஒன்றுபட வேண்டும் என்பதையே அமித்ஷாவுடன் வலியுறுத்தினேன். தொண்டர்களின் இயக்கமான அதிமுக எப்போதும் பிளவுபடாது. ஒன்றிணைய வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். அதேபோல் தனிக்கட்சி தொடங்குவதாக நான் எப்போதும் சொல்லவில்லை. செங்கோட்டையன் தவெகவில் இணைந்த பின் அவருடன் பேசவில்லை என்று தெரிவித்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்