Rock Fort Times
Online News

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் வியாபாரி தீக்குளிக்க முயன்ற விவகாரத்தில் உண்மை நிலவரம் என்ன?* விளக்கம் அளித்த திருச்சி சிட்டி போலீஸ் கமிஷனர் காமினி…! (வீடியோ இணைப்பு)

திருச்சி, பெரியகடை வீதியில் கடை நடத்தி வரும் ராஜா என்பவர் ரவுடி ஒருவர் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும், இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மனைவியுடன் தீக்குளிக்க  பெட்ரோல் கேனுடன் வந்தார். அவரை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் தடுத்து நிறுத்தி அறிவுரை கூறி  கலெக்டரிடம் மனு அளிக்க கேட்டுக் கொண்டனர். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில் இதுதொடர்பாக திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி ஐபிஎஸ் ஒரு வீடியோ பதிவு வெளியிட்டுள்ளார். அதில்,  திருச்சி கோட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பெரிய கடைவீதியில்  வாடகை கட்டிடத்தில் கடை நடத்தி வரும் ராஜா என்பவருக்கும்,  அந்த கட்டிடத்தின் உரிமையாளர் சுரேஷ் என்பவருக்கும்  கடையை காலி செய்வது தொடர்பாக சிறிய பிரச்சனை நடந்துள்ளது. ஆனால், இந்த விவகாரத்தில்  அனுதாபத்தை ஏற்படுத்தும் எண்ணத்தோடு போலீஸ் தலையிட வேண்டும் என்ற நோக்கத்தில் உண்மைக்கு புறம்பாக போலீஸ் மீது களங்கம் கற்பிக்கும் வகையில், அவதூறு பரப்பும் வகையில் உண்மைக்கு புறம்பான  செய்திகளை ராஜா பரப்பி வருகிறார். இவ்வாறு அந்த வீடியோ பதிவில் கமிஷனர் காமினி தெரிவித்துள்ளார்.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்