திருச்சி கீழச் சிந்தாமணி பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் கார்த்திகேயன் (வயது 14). இவன் சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறான். இன்று ஞாயிற்றுக்கிழமை பள்ளிக்கு விடுமுறை என்பதால் கீழச் சிந்தாமணி பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் கார்த்திகேயன் குளிக்க சென்றதாக தெரிகிறது. பிறகு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து மாணவனின் பெற்றோர் கோட்டை போலீசில் புகார் கொடுத்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்திகேயனை தேடினர். அப்போது காவிரி ஆற்றின் கரையில் கார்த்திகேயன் அணிந்திருந்த உடைகள் இருந்தன. இதனால், மாணவன் ஆற்றில் இறங்கி குளித்தபோது ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இது குறித்த தகவலின் பேரில் திருச்சி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காவிரி ஆற்றில் மூழ்கிய மாணவனை தீவிரமாக தேடி வருகின்றனர்.
Comments are closed.