தமிழக நிதித்துறை செயலாளராக பணியாற்றி வருபவர் உதயச்சந்திரன். இவருக்கு நேற்று லேசான நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. பரிசோதனையில் அவருக்கு இதயத்தில் அடைப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதைதொடர்ந்து அவருக்கு இதய அடைப்பை நீக்குவதற்கான சிகிச்சையை டாக்டர்கள் மேற்கொண்டனர்.தொடர்ந்து, அவருக்கு இதயத்தில் ஸ்டண்ட் வைக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக தொடர்ச்சியான வேலை பளு காரணமாக உதயச்சந்திரனுக்கு உடல்குறைவு ஏற்பட்டதாகவும், எனவே, கடினமான பணிகளை மேற்கொள்ள வேண்டாம் எனவும் டாக்டர்கள் அறிவுறுத்தியாக கூறப்படுகிறது.
Comments are closed.