Rock Fort Times
Online News

உணவு பதப்படுத்தும் தொழில்களுக்காக மத்திய அரசு கொண்டு வந்துள்ள மானிய திட்டங்கள் என்னென்ன..?- பாராளுமன்றத்தில் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய எம்.பி அருண் நேரு..!

பாராளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கேள்வி நேரத்தின் போது பெரம்பலூர் எம்.பி அருண் நேரு உணவு பதப்படுத்தும் தொழில்களை ஆதரிப்பதற்காக அரசு புதிய மானிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளதா ? என்ற கேள்வியை எழுப்பி அதற்காக மத்திய அரசு முன்னெடுத்துள்ள திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் என்னென்ன என்பது குறித்து கேள்வி எழுப்பினார். அப்போது அவர் பேசியதாவது., நுண், சிறு, நடுத்தர மற்றும் பெரிய அளவுகள் உட்பட பல்வேறு அளவிலான உணவு பதப்படுத்தும் தொழில்களை ஆதரிப்பதற்காக அரசாங்கம் புதிய மானிய திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளதா? அப்படியானால் அதன் விபரங்கள் என்னென்ன ? குறிப்பாக சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு இந்த திட்டங்களின் மொத்த ஒதுக்கீடு எவ்வளவு ?அதில் எதிர்பார்க்கப்படும் விளைவுகள் என்னென்ன ? அறுவடைக்கு பிந்தைய இழப்புகளை குறைப்பதற்கும் பழங்கள் காய்கறிகள் மற்றும் அழுகக்கூடிய பொருட்களின் அடுக்கு ஆயுளை மேம்படுத்துவதற்கும் அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன ? வேர்ல்ட் ஃபுட் இந்தியா போன்ற நிகழ்வுகள் மூலம் முதலீடு மற்றும் உலகளாவிய கவனத்தை அதிகரிக்க அரசாங்க முயற்சிகளை எடுத்துள்ளதா ? அப்படியானால் அதன் விபரங்கள் மற்றும் மதிப்பு கூட்டலை மேம்படுத்துதல், உணவு வீணாவதை குறைத்தல், இந்தியாவை ஒரு முன்னணி உணவு பதப்படுத்தும் இடமாக ஊக்குவித்தல் ஆகியவற்றை இந்த திட்டங்கள் எவ்வாறு நோக்கமாக கொண்டுள்ளன? என்ன கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்து பேசிய உணவு பதப்படுத்தும் தொழில்களுக்கான அமைச்சர் ஸ்ரீ ரன்பீர் சிங், உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகம் சிறு நடுத்தர மற்றும் பெரிய உணவு பதப்படுத்துதலுக்கான பிரதான் மந்திரி கிசான் சம்பாத யோஜனா ( PMKSY ) , மற்றும் உணவு பதப்படுத்தும் தொழில்களுக்கான உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்திட்டம் ( PLISFPI )ஆகிய இரண்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் மத்திய அரசின் நிதி உதவியுடன் கூடிய திட்டமான மைக்ரோ உணவு பதப்படுத்தும் நிறுவனங்களை முறைப்படுத்துதல் திட்டத்தையும் மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. , பிரதான் மந்திரி கிசான் சம்பாத யோஜனா திட்டத்தின்படி சுமார் 1,44,517 திட்டங்கள் உருவாக்கப்பட்டு, அதற்காக ரூ.5 ஆயிரத்து 570 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மைக்ரோ உணவு பதப்படுத்தும் நிறுவனங்களை முறைப்படுத்துதல் திட்டத்தின்படி சுமார் 10,000 திட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, சுமார் 170 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உணவு பதப்படுத்தும் தொழில்களுக்கான உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத் திட்டத்தில் 10.9 கோடி நிதி ஒதுக்கப்பட்டு அதில் 1601 திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன என பதில் அளித்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்