தாயகம் திரும்பியோர் நல அறக்கட்டளை சார்பாகவும், திருச்சி ரெப்கோ வங்கி ஏற்பாட்டிலும் தாயகம் திரும்பிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள பி.எல்.ஏ.ரெசிடென்சி யில் 29−06−2025 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக ரெப்கோ வங்கி தலைவர் இ. சந்தானம், ரெப்கோ ஹோம் பைனான்ஸ் தலைவர் சி.தங்கராசு ஆகியோர் கலந்து கொண்டு தாயகம் திரும்பிய ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். விழாவில் கணவனை இழந்த பெண்கள் சுமார் 130 நபர்களுக்கு இலவச தையல் இயந்திரமும், 35 நபர்களுக்கு ரூ. 4 லட்சத்து 60 ஆயிரம் மருத்துவ சிகிச்சைக்கான ஊக்கத் தொகையையும், பள்ளி, கல்லூரி மற்றும் ஒற்றை பெற்றோர்களின் 19 குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத்தொகை
ரூ.2 லட்சத்து 63 ஆயிரத்து 500-ம் வழங்கினர். விழாவில் வங்கி மேலாளர்கள், திருச்சி ரெப்கோ வங்கி திருச்சி தொகுதி “அ” வகுப்பு பங்குதாரர்கள் சங்க பேரவை பிரதிநிதி எம்.மாரி என்கிற பத்மநாபன், நவல் பட்டு பர்மா காலனி சகாயபிரகாஷ் மற்றும் திருச்சி தொகுதி ‘அ’ வகுப்பு சங்க பிரதிநிதிகள், உறுப்பினர்கள், வங்கி பணியாளர்கள், பங்கேற்று சிறப்பித்தனர்.

Comments are closed.