கோடை வெப்பத்திலிருந்து கண்களை பாதுகாக்க “கூலிங் கிளாஸ்” அணியுங்கள்- * போக்குவரத்து போலீசாருக்கு திருச்சி சரக டிஐஜி வருண்குமார் அறிவுறுத்தல்…!
ஓய்வூதியர் சங்கம் மற்றும் தனியார் மருத்துவமனை சார்பில் காவல்துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பயன்பெறும் வகையில் பக்கவாதம், வலிப்பு மற்றும் மூளை நரம்பியல் பிரச்சனைகளுக்கான இலவச மருத்துவ முகாம், திருச்சி சுப்பிரமணியபுரம் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்றது. திருச்சி சரக டிஐஜி வருண்குமார் முகாமை தொடங்கி வைத்துப் பேசினார். அவர் பேசுகையில், போக்குவரத்து ஒழுங்கு பணியில் இருக்கும் போலீசார், வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தங்களது கண்களை பாதுகாத்து கொள்வது அவசியம். ஆகவே, அனைவரும் “கூலிங் கிளாஸ்” அணிந்து கொள்ளுங்கள். கூலிங் கிளாஸ் அணிவது ஸ்டைலுக்காக அல்ல. கோடை காலத்தில் தூசி மற்றும் வெப்பத்தில் தாக்கத்திலிருந்து கண்களை காக்க உதவும் என்றார். முகாமில், திருச்சி சரகத்திற்குட்பட்ட போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் போலீசார் 25 பேருக்கு தலா ரூ.2500 மதிப்பிலான கூலிங் கிளாஸ் வழங்கப்பட்டது. இம்முகாமில் திருச்சி சரகத்திற்கு உட்பட்ட திருச்சி, அரியலூர், கரூர், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 170 பேர் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு பயன் பெற்றனர்.
Comments are closed.