2026 சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற பாடுபட வேண்டும்- திருச்சி திமுக பொதுக்கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி…!
திருச்சி தெற்கு மாவட்டம், கிழக்கு மாநகரம், அரியமங்கலம் பகுதி திமுக சார்பாக தமிழ்நாடு துணை முதல்வர் மற்றும் கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 47-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பகுதி கழகச் செயலாளர் ஏ.எம்.ஜி.விஜயகுமார் தலைமை தாங்கினார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கிழக்கு மாநகர செயலாளர் மு.மதிவாணன், மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் எஸ்.பத்மப்பிரியா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியதாவது :- துணை முதல்வர் பிறந்த நாள் விழாவை வெறும் கொண்டாட்டமாக மட்டும் இல்லாமல் மக்களுக்கு தேவையான விதத்தில்,நல்ல விதத்தில் பயனுள்ள வகையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற உணர்வில் பொதுக்கூட்டமாகவும் மக்களுக்கு பயனளிக்க கூடிய நல்ல கருத்துக்களை வழங்கக்கூடிய பொதுக்கூட்டமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நம்முடைய பொதுமக்கள் மனுக்களை வழங்குகிறார்கள் என்றால் அது வெறும் காகிதமாக மட்டும் பார்க்காதீர்கள். அந்த காகிதத்திற்கு பின்பு அந்த மக்களின் உண்மையான கோரிக்கைகளில் அடங்கியுள்ள உண்மை தன்மையை அறிந்து அந்த கோரிக்கையை நிறைவேற்றுகின்ற முதல் தளபதிகளாக நாம் இருக்க வேண்டும். இன்றைக்கு மாமன்ற உறுப்பினர்களாக, உங்களால் சட்டமன்ற உறுப்பினராக, உங்களால் அமைச்சராக பொறுப்பேற்று இருக்கின்ற நாங்கள் அதற்காக உறுதியாக செய்து தருவோம். மத்தியில் ஆண்டு கொண்டிருக்ககூடிய பாரதிய ஜனதா அரசு பாசிச அரசாக நம்முடைய கழுத்தை நெரிக்கும் அரசாக செயல்படுகிறது.
கழகத் தலைவர் கட்டளையிட்டது போல, வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் குறைந்தபட்சம் 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இதற்கு நாம் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும். பொதுமக்களாகிய நீங்கள் முதலமைச்சர் கொண்டுவந்த ஒவ்வொரு திட்டத்திற்கும் அவருடைய கருத்தை வலுப்படுத்துகின்ற விதமாக தொடர்ந்து நல் ஆதரவை வழங்கிட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் வண்ணை அரங்கநாதன், மாவட்ட துணைச் செயலாளர்கள் மூக்கன், லீலாவேலு, ராஜேஸ்வரன், மாநகர வர்த்தக அணி அமைப்பாளர் சரவணன், வட்ட கழகச் செயலாளர்கள் தங்கவேலு, சண்முகம், தினகரன், தலைமைக் கழக பேச்சாளர் பாலக்கரை விஜயலெக்ஷ்மி மற்றும் பகுதி, நகர, மாவட்ட, கழக நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
Comments are closed.