Rock Fort Times
Online News

நாங்கள் வெற்றியை எதிர்பார்க்கிறோம்: கமல்ஹாசன் உறுதி!

மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன், ஹைதராபாத்தில் நடைபெறும் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னை விமான நிலையம் வந்தார். அப்போது பேசிய அவர், நிகழ்ச்சிக்கு செல்லும் காரணத்தால் தற்போது அரசியல் பேச விரும்பவில்லை என்றும், நிகழ்ச்சி முடிந்த பிறகு அரசியல் குறித்து பேசுவேன் என்றும் தெரிவித்தார். மேலும், திமுகவுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், ஒதுக்கப்படும் தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்றும் கூறினார். எந்த சின்னத்தில் போட்டியிடுவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக தெரிவித்த அவர், யாருக்கு வெற்றி வாய்ப்பு என்பது மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என்றும் கூறினார். “நாங்கள் வெற்றியை எதிர்பார்க்கிறோம்; அவ்வளவுதான்” என்றும் அவர் தெரிவித்தார். தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. திமுக கூட்டணியில் ஏற்கனவே பல கட்சிகளுடன் தொகுதி பங்கீடு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மக்கள் நீதி மய்யத்திற்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது இன்னும் தெரியவில்லை. அதேநேரத்தில், அக்கட்சியின் தொண்டர்கள் தொகுதி பங்கீடு குறித்து ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்