திருச்சி கம்பரசம்பேட்டை பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையத்தில் நாளை(26-11-2023) மோட்டார் பம்ப் செட்டுகள் மராமத்து பணி மேற்கொள்ளப்படுகிறது. இதன் காரணமாக பெரியார் நகர் கலெக்டர் வெல் நிலையத்திற்கு உட்பட்ட தில்லை நகர் , அண்ணா நகர் , புத்தூர், காஜாப்பேட்டை , கண்டோன்மெண்ட் , ஜங்ஷன் , உய்யகொண்டான் திருமலை , தெற்கு ராமலிங்க நகர், பாத்திமா நகர் , கருமண்டபம் மற்றும் காஜாமலை காலனி ஆகிய பகுதிகளில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் மூலம் குடிநீர் விநியோகம் இருக்காது . மறுநாள் 27.11.2023 அன்று வழக்கம் போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும். ஆகவே, பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தி மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறு மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன் கேட்டுக் கொண்டுள்ளாா்.
Next Post

Comments are closed, but trackbacks and pingbacks are open.