திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை தென்மண்டலத்தில் அமைந்துள்ள 3 ரயில்வே பணிமனைகளில் மிகப் பெரிய பணிமனையாகும். இப்பணிமனையானது, 1926-ல் அடிக்கல் நாட்டப்பட்டு 1928-ல் கட்டி முடிக்கப்பட்டு 96 வருடங்கள் ஆகிறது. 200 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த பணிமனை முற்றிலும் கிழக்கிந்திய கம்பெனி என்று அழைக்கப்படும் பிரிட்டிஷ் கட்டிடக்கலை வல்லுநர்களால் வடிவமைக்கப்பட்டது. இப்பணிமனையில் ஆயுத பூஜையை முன்னிட்டு வருடத்திற்கு ஒரு நாள் மட்டும் பொதுமக்கள் பார்வையிட ரயில்வே நிர்வாகம் அனுமதி அளிக்கும். அந்த வகையில் நாளை (சனிக்கிழமை ) 21.10.2023 காலை 9 மணி முதல் 12 மணி வரை பொதுமக்கள், பள்ளி-கல்லூரி மாணவ மாணவியர் சுற்றி பார்க்க ரயில்வே நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.