Rock Fort Times
Online News

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் நடைப்பயணம்….

தலைவர் ஜவகர் தலைமையில் நடந்தது...

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயண ஓராண்டு நிறைவுநாளை முன்னிட்டு கட்சி அலுவலகமான அருணாசலம் மன்றத்தில் இருந்து தொடங்கிய நடைபயணம், காந்தி மார்க்கெட்டில் உள்ள மகாத்மா காந்தியின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து நிறைவடைந்தது . இந்த நடைபயணமானது  திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ஜவகர் தலைமையில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் விச்சு என்கிற லெனின் பிரசாத், மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞா் சரவணன், மாநில பொதுக்குழு உறுப்பினர், கவுன்சிலர் எல். ரெக்ஸ், மாவட்ட துணைத்தலைவர் வில்ஸ் முத்துக்குமார், மாவட்ட செயலாளர்கள் மேலபுதூர் சத்தியநாதன், அண்ணா சிலை விக்டர், கோட்டத் தலைவர்கள் சிவாஜி சண்முகம், ராஜா டேனியல்ராய், ரவி, பிரியங்கா பட்டேல், சிறுபான்மை பிரிவு பஜார்மைதீன், நிர்வாகிகள் அப்துல் குத்தூஸ், ஜெகதீஸ்வரி , அரிசி கடை டேவிட் உள்பட மாவட்ட, கோட்ட நிர்வாகிகள், வார்டு தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்