திருச்சியில் வரும் ஞாயிற்றுக்கிழமை 26ம் தேதி காலை பெண்களின் சுய பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுக்கான நடை பயணம் ‘Walk A Thon’ என்ற பெயரில் நடக்கிறது. ரி ஹாப் இந்தியா சேரிட்டபிள் டிரஸ்ட்(Rehab India charitable Trust) மாநகர காவல் துறை, முகேஷ் ஆர்த்தோக்கர் ஹாஸ்பிடல் ஆகியவை சார்பில் நடைபெறும் பெண்களின் சுய பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுக்கான நடை பயணத்தில் ஆண்களும் பெண்களும் கலந்து கொள்ளலாம் .வரும் ஞாயிற்றுக்கிழமை 26ம் தேதி காலை 5:30 மணிக்கு திருச்சி தலைமை தபால் நிலையத்திலிருந்து அண்ணா ஸ்டேடியம் வரை இந்த நடைபயணம் நடைபெறுகிறது. இந்த நடைபயணத்தில் கலந்து கொள்ள விரும்பும் ஆண்கள் 150 ரூபாயும் பெண்கள் 100 ரூபாயும் செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம். முதலில் பதிவு செய்யும் ஆயிரம் நபர்களுக்கு இலவசமாக டீசர்ட் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 98431 12269 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
