திருச்சியில் 3 இடங்களில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு- வாக்காளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு…!
திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிராப்பட்டி லிட்டில் பிளவர் பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது வாக்கினை செலுத்தினார்.
இதன் அருகில் உள்ள 214 மற்றும் 215 எண் கொண்ட வாக்கு சாவடி மையங்களில் வாக்குப்பதிவு எந்திரத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டது. இதன்காரணமாக
30 நிமிடங்களுக்கு மேலாக அங்கு வாக்குப்பதிவு நடைபெறவில்லை. இதனால், 30 நிமிடத்திற்கு மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்த வாக்காளர்கள் தேர்தல் அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை சமாதானப்படுத்திய அலுவலர்கள் , கோளாறை சரி செய்த பின்னர் வாக்களிக்க அனுமதித்தனர்.
இதேபோல, திருச்சி பெரியமிளகுபாறையில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் வாக்குச்சாவடி எண் 191-ல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் தேர்தல் அலுவலர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர். பின்னர் கோளாறு சரி செய்யப்பட்டு வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். இதன் காரணமாக இந்த 3 வாக்குச்சாவடிகளிலும் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.