Rock Fort Times
Online News

வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி: மத்திய, வடக்கு மாவட்ட தி.மு.க. அழைப்பு…

திருச்சி மத்திய, மாவட்ட திமுக செயலாளர் க.வைரமணி, வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ந.தியாகராஜன் எம்.எல்.ஏ. ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

1.01.2024 ஆம் தேதியன்று வயது 18 பூர்த்தியடையக்கூடிய புதிய வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி ஏற்படும் நாளாக கொண்டு இந்திய தேர்தல் ஆணையம் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்கவும் நீக்கவும் திருத்தம் செய்யவும் 27.10.2023 முதல் 9.12.2023 வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், வாக்காளர்களை சேர்பதற்கும், நீக்குவதற்கும், திருத்தம் செய்திடவும் சிறப்பு முகாம்கள் 4.11.2023, 5.11.2023 சனி, ஞாயிறு மற்றும் 18.11.2023, 19.11.2023 சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் அனைத்து வாக்குசாவடி மையங்களிலும் நடைபெற இருக்கிறது. இந்த பணிகளில் மாவட்ட, மாநகர, அனைத்து ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழக, கிளை கழக நிர்வாகிகள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், கழக முன்னோடிகள், செயல்வீரர்கள் அனைவரும் அயராது பணியாற்றிட வேண்டுகிறோம். இந்தபணிகளில் வாக்குசாவடி நிலைய முகவர்கள், வாக்குசாவடி அளவிலான குழு உறுப்பினர்கள் அனைவரும் தங்களை முழுமையாக ஈடுபடுத்திகொள்ள வேண்டுகிறோம். இவ்வாறு அவர்கள் அந்த அறிக்கையில் கூறியுள்ளனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்