போதிய பயணிகள் ஆதரவு இல்லாததால் விழுப்புரம் – ராமேஸ்வரம் அதிவிரைவு ரயில் ரத்து செய்யப்படுகிறது. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில், பயணிகள் ஆதரவு இல்லாததால், விழுப்புரம் – ராமேஸ்வரம் அதிவிரைவு ரயிலானது (06105) ஜூன் 13, 14, 16, 17, 20, 21, 23, 27, 28, 30 தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக, ராமேஸ்வரம் – விழுப்புரம் அதிவிரைவு ரயிலானது (06106) வருகிற 9, 10, 13, 14, 16, 17, 20, 21, 23, 24, 27, 28, 30 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.