Rock Fort Times
Online News

மணப்பாறை அருகே வனத்துறையினரை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்…* 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு!

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பன்னாங்கொம்பு பகுதியில், மகா சிவராத்திரியை முன்னிட்டு சிலர் பாரி வேட்டைக்கு சென்றதாக கூறப்படுகிறது. அவர்களை வனத்துறையினர் தடுத்து நிறுத்தி விலங்குகளை வேட்டையாடக் கூடாது என எச்சரிக்கை செய்துள்ளனர். மேலும், இதுதொடர்பாக 3 பேரை வனத்துறையினர் பிடித்து சென்றதாக கூறப்படுகிறது. இதுபற்றி தகவல் அறிந்த கிராம மக்கள் சம்மந்தப்பட்ட வனத்துறை வாகனத்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதுடன் மணப்பாறை – துவரங்குறிச்சி சாலையில் பன்னாங்கொம்பு பகுதியில் மறியலில் ஈடுபட்டனர். இதனால், அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த மணப்பாறை போலீஸ் துணை சூப்பிரண்டு காவியா மற்றும் வனத்துறையினர் மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதுடன் வனத்துறையினர் பிடித்த 3 பேரையும் விடுவித்த நிலையில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதுடன் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்