கன்னியாகுமரியில் நாளை(ஏப்.12) விஜய் தேர்தல் பிரச்சாரம்:* 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு 6 மணி நேரம் மட்டுமே அனுமதி!
தமிழக சட்டமன்ற தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தனித்து போட்டியிடுகிறது. அவர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தங்களது வேட்பாளர்களை ஆதரித்து பேசி வருகிறார். அவர் செல்லும் இடமெல்லாம் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருக்கிறது. குறிப்பாக, இளைஞர்கள், இளம்பெண்கள் மத்தியில் மிகப்பெரிய எழுச்சி காணப்படுகிறது. சென்னை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் பிரச்சாரம் செய்த அவர் நேற்று மதுரை மற்றும் காரைக்குடியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து நாளை(ஏப்ரல் 12) கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரச்சாரம் செய்கிறார். நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் மற்றும் கன்னியாகுமரி ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் தமிழக வெற்றிக்கழக வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை செய்கிறார். நாளை கன்னியாகுமரிக்கு வருகை தரும் விஜய், அங்குள்ள விவேகானந்தர் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை கட்சி நிர்வாகிகள் முன் நின்று செய்து வருகின்றனர். இந்த கூட்டத்திற்கு பல்வேறு நிமந்தனைகளுடன் காவல்துறை அனுமதி அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை கூட்டத்தை நடத்த அனுமதி கோரியிருந்தனர். ஆனால், பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்குமுறை உள்ளிட்ட காரணங்களைக் கருத்தில் கொண்டு, மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே கூட்டத்தை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த 6 மணி நேரத்திற்குள் நிகழ்ச்சியை முடித்துக் கொள்ள வேண்டும் என்று கடுமையான கட்டுப்பாடுகளை காவல்துறை விதித்துள்ளது.

Comments are closed.