திருச்சியில் செப்.13ம் தேதி தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்கும் விஜய்- 23 நிபந்தனைகள் விதித்த காவல்துறை…!
திருச்சி, 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் மக்களுடன் சந்திப்பு என்ற பெயரில் தமது முதல் சுற்றுப்பயணத்தை வருகிற 13-ம் தேதி தொடங்குகிறார். திருச்சி மரக்கடை பகுதியில் தவெக தலைவர் விஜய்-யின் பிரசாரத்திற்கு 23 நிபந்தனைகள் விதித்துள்ளது திருச்சி காவல்துறை. விஜய்யின் வாகனத்திற்கு பின்னால் 5 வாகனங்களுக்கு மேல் எந்தவொரு வாகனமும் அனுமதிக்கப்படாது. விஜய் வாகனத்தின் முன்னும் பின்னும் தொண்டர்கள் பைக், 4 சக்கர வாகனங்களில் ஊர்வலமாக செல்லக்கூடாது. பரப்புரையின் போது வரக்கூடிய வாகனங்களுக்கான பார்க்கிங் வசதிகளை தவெகவினரே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். கர்ப்பிணிகள், குழந்தைகள், வயது முதிர்ந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள் வருவதை தவிர்த்திட வேண்டும். மரக்கடையில் பிரசாரம் முடிந்ததும் பால்பண்ணை வழியாக சென்னை பைபாசில் லால்குடி, வாளாடி கிராமத்துக்குள் செல்லாமல் அரியலூர் மாவட்டத்திற்கு செல்ல வேண்டும் உள்ளிட்ட 23 நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இது தவெக தொண்டர்கள், நிர்வாகிகளை அதிருப்தி அடைய செய்துள்ளது.
Comments are closed.