Rock Fort Times
Online News

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய விஜய்…!

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் 118-வது ஜெயந்தி மற்றும் 63-வது குருபூஜை விழாவையொட்டி பசும்பொன் தேவர் நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், பனையூரில் அமைந்துள்ள த.வெ.க. அலுவலகத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் உருவ படத்திற்கு அக்கட்சியின் தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதுதொடர்பாக விஜய் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றவர், ஏழை, எளிய மக்களின் முன்னேற்றத்திற்காகதமது வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர், அய்யா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர். சமூக ஒற்றுமை, மத நல்லிணக்கத்திற்காக தன்னை அர்ப்பணித்த அய்யா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பிறந்தநாள் மற்றும் குரு பூஜை தினத்தில், எமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன் என்று கூறியுள்ளார்.

இதேபோல, தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் , அருண்ராஜ், சிடிஆர் நிர்மல்குமார் மற்றும் மாநில , மாவட்ட நிர்வாகிகள் பசும்பொன் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்