Rock Fort Times
Online News

விஜய் கட்சி கொடிக்கும், எங்கள் சமுதாய கொடிக்கும், எந்த சம்பந்தமும் இல்லை: வெள்ளாளர் முன்னேற்றக் கழக தலைவர் ஹரிஹரன்…!

வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் ஹரிஹரன் பிள்ளை திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறுகையில்,நடிகர் விஜய் அண்மையில் தனது கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தியுள்ளார். அவரது கட்சி கொடியின் மேல் மற்றும் கீழ் இருபுறமும் சிவப்பு நிறமும், நடுவில் மஞ்சள் நிறமும் இடம்பெற்றுள்ளது.எங்கள் அமைப்பின் கொடியும் அதே நிறத்தில் தான் இருக்கிறது. ஆனால், விஜய் கட்சி கொடிக்கும், எங்களது அமைப்பின் கொடிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எங்கள் கொடியில் புலி இடம் பெற்றுள்ளது. மேலும் அமைப்பின் பெயரும் கொடியில் இருக்கும்.ஆனால், விஜய் கட்சி கொடியில் புலி இல்லை. எங்களுடைய அமைப்பு சமூக ரீதியிலானது. நடிகர் விஜய் ஒரு உச்ச நட்சத்திரம். அவர் ஜாதி, மதங்களைக் கடந்து பொதுவான ஒரு அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார் .அவரது குடும்பத்தைச் சேர்ந்த பலரும் எங்கள் அமைப்பில் இருக்கிறார்கள். அவருக்கு எங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். திருச்சியில் நடிகர் விஜய் போட்டியிட்டால் வரவேற்போம்.இவ்வாறு அவர் கூறினார்.பேட்டியின் போது அமைப்பின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

திருச்சி பொன்மலை ஜி கார்னர் ரயில்வே பாலத்தில் மீண்டும் விரிசல் வாகன ஓட்டிகள் அச்சம்

1 of 840

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்