Rock Fort Times
Online News

“மை டிவிகே” என்ற பெயரில் உறுப்பினர் சேர்க்கை செயலியை அறிமுகப்படுத்தினார், விஜய்…!

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அதனை சந்திக்க த.வெ.க. தீவிரம் காட்டி வருகிறது. ‘மக்கள் விரும்பும் முதல்-அமைச்சர் வேட்பாளர்’ என்ற பிரசாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கட்சியின் கட்டமைப்பு பணிகளை பலப்படுத்தும் பணியில் விஜய் ஈடுபட்டு வருகிறார். அந்தவகையில் கட்சிக்கு புதிய உறுப்பினர் சேர்க்கை பணியை விரைவுப்படுத்த புதிய செயலி ஒன்றை விஜய் இன்று ( ஜூலை 30) அறிமுகப்படுத்தினார். இதற்கான நிகழ்ச்சி பனையூரில் உள்ள த.வெ.க. தலைமை அலுவலகத்தில் நடந்தது. கட்சியில் உறுப்பினர் சேர்க்கைக்கு புகைப்படம் எடுத்து, தொலைபேசி எண்ணை செயலியில் பதிவிட வேண்டும். ஓ.டி.பி. கேட்காத வகையில், அது வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று, ஒரு பூத்தில் எத்தனை வீடுகள் உள்ளன, எவ்வளவு வாக்காளர்கள் உள்ளனர் என்பன போன்ற தகவல்களும் செயலியில் இடம் பெற்றுள்ளன. இந்த செயலியை த.வெ.க. தலைவர் விஜய் நேரடியாக கண்காணிப்பார் என்று சொல்லப்படுகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்