தேர்தல் பரப்புரைக்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார் விஜய்- கார் மூலம் நாகை பயணம்…!
விஜயின் தமிழக வெற்றிக் கழகம் வருகிற சட்டமன்றத் தேர்தலில் முதல் முறையாக களம் காண்கிறது. இதற்காக இரண்டு மாநாடுகளை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ள விஜய், தனது முதல் தேர்தல் பரப்புரையை திருச்சியில் இருந்து கடந்த 13-ம் தேதி தொடங்கினார். இந்நிலையில் தனது இரண்டாவது கட்ட தேர்தல் பரப்புரையை நாகை, திருவாரூர் மாவட்டங்களில் இன்று (20-09-2025) மேற்கொள்கிறார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் விஜய் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார். பின்னர் அவர் கார் மூலம் சாலை மார்க்கமாக நாகை மாவட்டத்திற்கு புறப்பட்டு சென்றார். நாகப்பட்டினம், புத்தூர் அண்ணா சிலை சந்திப்பு, திருவாரூர் நகராட்சி அலுவலகம் தெற்கு வீதி ஆகிய இரண்டு இடங்களில் அவர் பேசவுள்ளார்.
Comments are closed.