Rock Fort Times
Online News

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் வேடுபறி நிகழ்ச்சி: தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளிய நம்பெருமாள்…!

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா நடைபெற்று வருகிறது. ஏற்கனவே, பகல்பத்து நிகழ்ச்சிகள் நிறைவுற்ற நிலையில் ராப்பத்து நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. ராப்பத்து உற்சவத்தையொட்டி நேற்று மாலை ஆயிரங்கால் மண்டபத்தில் நம்பெருமாள் கைத்தல சேவை நடந்தது. ராப்​பத்து உற்சவத்​தின் 8ம் நாளான இன்று (ஜன.6) திரு​மங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையொட்டி, மாலை 5 மணிக்கு சந்தனு மண்டபத்​தில் இருந்து நம்பெரு​மாள் தங்க குதிரை வாகனத்​தில் புறப்​பட்டு வையாளி வகையறா கண்டருளினார். இரவு 7.30 மணிக்கு திரு​மாமணி மண்டபம் சென்​றடைகிறார். அங்கு உபயதாரர் மரியாதை​யுடன் பொதுஜன​சேவை நடைபெறுகிறது. இரவு 11 மணிக்கு திரு மாமணி மண்டபத்​தில் இருந்து புறப்​பட்டு வீணை வாத்​தி​யத்​துடன் நம்பெரு​மாள் நள்ளிரவு 12.15 மணிக்கு மூலஸ்​தானம் சென்​றடைகிறார். விழா​வின் 10ம் நாளான 8ம் தேதி தீர்த்​தவாரி நடைபெறுகிறது. 9ம் தேதி நம்மாழ்​வார் மோட்​சம், இயற்பா சாற்றுமறை நிகழ்ச்​சி​யுடன் வை​குண்ட ஏ​காதசி ​விழா நிறைவடைகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்