Rock Fort Times
Online News

வேட்டையன் படம் இன்று ரிலீஸ்: திருச்சியில் ரஜினி படத்துக்கு ஒரு டன் மலர்களை தூவி ரசிகர்கள் கொண்டாட்டம்…!

தியேட்டரில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்

நடிகர் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் திரைப்படம் இன்று (10-10-2024) உலகம் முழுவதும் வெளியானது.  திருச்சியில் பல்வேறு தியேட்டர்களில்  வெளியானதையடுத்து ரஜினி ரசிகர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.  இதை முன்னிட்டு திருச்சி எல்.ஏ.மாரிஸ் திரையரங்கில்  திருச்சி மாவட்ட ரஜினிகாந்த் தலைமை ரசிகர் மன்ற மாவட்ட துணை செயலாளர் வழக்கறிஞர் சுதர்சன் தலைமையில் மாவட்ட செயலாளர் எம். கலில் மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் பிரம்மாண்டமான  ரஜினிகாந்த் பிளக்ஸ் பேனருக்கு ஜே.சி.பி இயந்திரம் மூலம் ஒரு டன் மலர்களை தூவி ரசிகர்கள் கொண்டாடினர்.

அப்போது ஆரவாரம் இட்டு ரசிகர்கள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.  இந்நிகழ்வில், மாவட்ட துணை செயலாளர் ராயல் ராஜு , ஸ்ரீ அம்மன் கார்ஸ் எம்.சிவா , மாவட்ட நிர்வாகிகள் கர்ணன் ,எஸ்.டி.ராஜ், பாலன், மனோகர், ராஜ்குமார், நோபல், அலெக்ஸ், விமல்ஜித் மற்றும் ரசிகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  இதேபோல் திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களிலும் வேட்டையன் படம் வெளியானதை யொட்டி ரசிகர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்