Rock Fort Times
Online News

திருமாவளவனுக்கு ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு கோரி திருச்சியில் வி.சி.க.வினர் ஆர்ப்பாட்டம்…!

அரசியல் கட்சித் தலைவர்களுக்கு மத்திய அரசு வழங்கி வரும் ‘இசட் பிளஸ்” பாதுகாப்பு விசிக தலைவர் திருமாவளவனுக்கும் வழங்க வேண்டி திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர்கள் புல்லட் லாரன்ஸ், கனியமுதன், சக்திஆற்றலரசு, வழக்கறிஞர் கலைச்செல்வன், குருஅன்புசெல்வன் ஆகியோர் தலைமையில் ரயில்வே ஜங்ஷன் எதிரே உள்ள காதி கிராப்ட் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு மத்திய அரசு உடனடியாக இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க வலியுறுத்தியும், உச்சநீதிமன்றத்தில் நீதியரசர் கவாய் மீது காலணி வீசிய வழக்கறிஞர் ராஜேஷ்கி‌ஷோரை கைது செய்ய வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் திருச்சி – கரூர் மண்டல செயலாளர் தமிழாதன், திருச்சி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தங்கதுரை, மாநில நிர்வாகிகள் அரசு, புரோஸ்கான், விஜயபாலு, அஷ்ரப்அலி மற்றும் மாவட்ட நிர்வாகி சந்தனமொழி, மாநில மகளிர் அணி செயலாளர் லட்சுமிபிரியா, கஸ்தூரி, நிர்வாகிகள் சிறுத்தை குணா மற்றும் மாநில, மாவட்ட, நகர, நிர்வாகிகள், அணியினர் திரளாக கலந்து கொண்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்