Rock Fort Times
Online News

மணப்பாறையில் ஆபத்தான நிலையில் செயல்படும் விஏஓ அலுவலக கட்டிடம்…!( வீடியோ இணைப்பு)

திருச்சி மாவட்டம், மணப்பாறை நகர் பகுதி மற்றும் செவலூர் கிராமம்  உள்ளிட்ட பகுதிகளுக்கு மணப்பாறை  ஆர்.எஸ்.ரோடு பகுதியில் கிராம நிர்வாக அலுவலகம்( விஏஓ) இயங்கி வருகிறது.  இந்த அலுவலகம் கடந்த 2003- 2024ம் ஆண்டு அப்போதைய குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் கட்டப்பட்டதாகும். இந்த கட்டிடம் மிகவும் பழுதடைந்து மேற்கூரை பெயர்ந்து விழுந்து வருகிறது. இதனால் அலுவலகத்தில் பணியாற்றும் விஏஓ மற்றும் ஊழியர்கள், அலுவலகத்துக்கு வரும் பொதுமக்கள் மிகவும் அச்சத்துடனேயே வந்து செல்கின்றனர்.  குறிப்பாக கிராம நிர்வாக அலுவலர் தனது இருக்கையை வெளிப்புறத்தில் போட்டு அமர்ந்து பணியாற்றி வருகிறார். தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் ஏதேனும் விபரீதம் ஏற்படும் முன்பு இந்த கட்டிடத்தை இடித்து விட்டு புதிய விஏஓ அலுவலகம் கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்