சென்னையில் இருந்து புறப்பட்ட வந்தே பாரத் சோதனை ஓட்ட ரயில் திருச்சி வந்தடைந்தது…
24-ம் தேதி சேவை தொடக்கம்...
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, நாடு முழுவதும் வருகிற 24-ம் தேதி 9 வந்தே பாரத் ரயில்களை காணொளி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். இதில், தெற்கு ரயில்வே கோட்டத்தில் காசர்கோடு- திருவனந்தபுரம், சென்னை- விஜயவாடா, நெல்லை-சென்னை ஆகிய 3 வந்தே பாரத் ரயில்கள் இடம் பெற்றுள்ளன. இதில் நெல்லை-சென்னை வந்தே பாரத் ரயில் சேவை தொடக்க விழா நிகழ்ச்சி வருகிற 24-ம் தேதி நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம் இன்று நடந்தது. அதன்படி சென்னையில் இருந்து புறப்பட்ட இந்த ரயில் திருச்சி ரயில் நிலையத்தை காலை 11 மணியளவில் வந்தடைந்தது. திருச்சி கோட்ட மேலாளர் அன்பழகன் தலைமையிலான அதிகாரிகள் அந்த ரயிலுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் அந்த ரயில் சிறிது நேரத்தில் நெல்லை நோக்கி புறப்பட்டு சென்றது.


Comments are closed, but trackbacks and pingbacks are open.