கோவை- பெங்களூரு இடையே வந்தே பாரத் ரயில் சேவை டிசம்பா் 30ல் துவக்கம் : மத்திய அமைச்சர் எல்.முருகன் தகவல்…
‘கோவை- பெங்களூரு இடையே வந்தே பாரத் ரயில் சேவை வரும் டிசம்பா் 30ம் தேதி துவங்கப்பட உள்ளது” என மத்திய அமைச்சர் எல்.முருகன் தகவல் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் காரமடை தனியார் திருமண மண்டபத்தில் நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் யாத்திரை நிகழ்ச்சி நடந்தது. இதில் மத்திய அமைச்சர் எல். முருகன் பேசியதாவது:
இந்தியாவை வல்லரசு நாடாக உருவாக்க வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்த, இளைஞர்களின் தொழில் திறனை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது என்றார். தொடர்ந்து, கோவை- பொள்ளாச்சி முன்பதிவில்லா புதிய ரயில் சேவையை எல்.முருகன் துவக்கி வைத்தார். பின்னர் அவர், ” அம்ரித் பாரத் திட்டத்தில் கோவை ரயில் நிலையம் சேர்க்கப்பட்டுள்ளது. கோவை- பெங்களூரு இடையே வந்தே பாரத் ரயில் சேவையை வரும் டிச. 30ம் தேதி துவங்கப்பட உள்ளது” எனக் கூறினாா். கோவையில் இருந்து காலை 5:20 மணிக்கு கிளம்பும் இந்த ரயில், போத்தனூர், கிணத்துக்கடவு வழியாக பொள்ளாச்சிக்கு காலை 6:25 மணிக்கு சென்றடையும். மறுமார்க்கத்தில் பொள்ளாச்சியில் இருந்து இரவு 8:55 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லா விரைவு ரயில் கோவைக்கு இரவு 10:15 மணிக்கு சென்றடையும்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.