Rock Fort Times
Online News

சென்னை – கோவை இடையே வந்தே பாரத் ரயில் வெள்ளோட்டம்!

சென்னை – கோவை இடையே வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டமாக இன்று கோவை ரயில் நிலையத்திற்கு வந்தடைந்தது. வந்தே பாரத் ரயில்களுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. இதனை ஒட்டி 12வது வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டம் சென்னை – கோவை இடையே நடந்தது. சென்னை சென்ட்ரலில் அதிகாலை 5 .40 மணிக்கு புறப்பட்ட இந்த ரயில் முற்பகல் 11. 40 மணிக்கு கோவை ரயில் நிலையம் வந்தடைந்தது. அங்கிருந்து பகல் 12.40 மணிக்கு புறப்பட்டு மாலை 6.40 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்றடையவுள்ளது. இரு மார்க்கமாகவும் ஜோலார்பேட்டை சேலம் ஈரோடு திருப்பூர் ஆகிய நிலையங்களிலும் நின்று செல்லும்.

1 Comment
  1. mitolyn says

    **mitolyn**

    Mitolyn is a carefully developed, plant-based formula created to help support metabolic efficiency and encourage healthy, lasting weight management.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்