Rock Fort Times
Online News

திருப்பத்தூர் அருகே வேன் மீது லாரி மோதல் : 7 பெண்கள் பலி….

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த ஓணான் குட்டை கிராமத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் 45 பெண்கள் கடந்த 8-ம் தேதி கர்நாடக மாநிலம் தர்ம ஸ்தாலாவிற்கு 2 நாட்கள் சுற்றுலா சென்றுள்ளனர். பின்னர், அங்கிருந்து திருப்பத்தூர் நோக்கி வேனில் வந்து கொண்டு இருந்தனர். திருப்பத்துாரை அடுத்த நாட்றம்பள்ளி சண்டியூர் பகுதியில் பெங்களூரு- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வேன் வந்தபோது திடீரென டயர் பஞ்சரானது. உடனே, வேன் ஓரமாக நிறுத்தப்பட்டது. அதிலிருந்து பெண்கள் கீழே இறங்கி நெடுஞ்சாலை தடுப்புச்சுவர் அருகே அமர்ந்திருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மினி லாரி, நின்றிருந்த வேன் மீது மோதியதுடன், அங்கே அமர்ந்து இருந்தவர்கள் மீதும் கண் இமைக்கும் நேரத்தில் மோதியது. இந்த விபத்தில் மீரா (50), தெய்வானை (32), சேட்டு அம்மாள் (50), தேவகி (50), சாவித்திாி (42), கலாவதி (50), கீதாஞ்சலி (32) ஆகிய 7 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 10 பேர் காயம் அடைந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் மற்றும் போலீசாா் அவர்களை மீட்டு அருகில் உள்ள வானியம்பாடி, நாட்றம்பள்ளி, திருப்பத்துாா், கிருஷ்ணகிாி அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். மேலும்  விபத்தில் இறந்தவா்கள் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து நாட்றம்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்