Rock Fort Times
Online News

முதல்வர் உத்தரவுப்படி ஸ்ரீரங்கத்தில் வள்ளலார் முப்பெரும் விழா!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்ற அறிவிப்பின்படி வள்ளலார் முப்பெரும் விழா ஸ்ரீரங்கத்தில் நடக்கிறது. தொடர்ச்சியாக ஜோதி வழிபாடு ,அகவல் பாராயணம் மற்றும் தொடர் அன்னதானம் 07.04.2023 முதல் 10.04.2023 வரை நான்கு நாட்கள் கொள்ளிடம் பஞ்சக்கரை சாலையில் உள்ள யாத்திரி நிவாஸில் நடைபெற உள்ளது .அதை முன்னிட்டு இன்று காலை 10 மணியளவில் கோவில் இணை ஆணையர் செ.மாரிமுத்து முன்னிலையில் ஜோதி வழிபாடுடன் நிகழ்ச்சி தொடங்கியது. இந்நிகழ்வில் திருச்சி மாநகராட்சி ஸ்ரீரங்கம் கோட்ட தலைவர் ஆண்டாள் இராம்குமார் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்,மதியம் 12.15 மணி அளவில் அன்னதானம் நடைபெறும் .

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்