தஞ்சாவூரின் 75 ஆண்டுகளுக்கும் மேலான இனிப்பு பாரம்பரியம் கொண்டது பாம்பே ஸ்வீட்ஸ். திருச்சியில் காட்டூர் மற்றும் அண்ணாமலை நகர் ஆகிய இரண்டு இடங்களில் தனது கிளைகளை நிறுவியுள்ளது. 1949 ஆம் ஆண்டு குருதயா சர்மா என்பவரால் தஞ்சாவூர் ரயிலடியில் தொடங்கப்பட்ட பாம்பே ஸ்வீட்ஸ், தற்போது பட்டுக்கோட்டை மற்றும் திருச்சியில் பல கிளைகளுடன் இயங்கி வருகிறது. இங்கு நார்த் இந்தியன் ஸ்டைலில் தயாரிக்கப்படும் சந்திரகலா ஸ்வீட்ஸ், பேல்பூரி, பாவ் பஜ்ஜி, மசாலா பூரி போன்றவற்றிற்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில், சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக திருச்சி வந்திருந்த கவிஞர் வைரமுத்து, கரூர் பைபாஸ் சாலை அண்ணாமலை நகரில் உள்ள பாம்பே ஸ்வீட்ஸ்க்கு வருகை தந்தார். அவரை பாம்பே ஸ்வீட்ஸ் நிர்வாக இயக்குனர் சுப்பிரமணிய சர்மா, அம்மு மற்றும் ஸ்ரீகலா ஆகியோர் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து, கவிஞர் வைரமுத்து பாம்பே ஸ்வீட்ஸை தனது கவிதைநடையில் வாழ்த்தி புகழாரம் சூட்டினார்.
இதுகுறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
“தஞ்சையில் பாரம்பரியப் புகழோடு விளங்கும் ‘பாம்பே ஸ்வீட்ஸ்’ மணி திருச்சியில் திறந்திருக்கும் தமது கிளைக்கு அன்போடு அழைத்தார் என்னை ஓர் இனிப்புக் கடையைக் கலைக்கூடமாக வனைந்திருந்தார். நேர்த்தியினால் கீர்த்தி பெற்றவர்களுள் இவரும் ஒருவர் கால்களில் சக்கரத்தையும் தோள்களில் சிறகுகளையும்
கட்டிக்கொண்டவர் அளவுக்குள் துய்க்கப்படும் இனிப்பு என்பது ஆற்றல்; உற்சாகம்; கொண்டாட்டம் இந்தியாவின் பெருந்தொழில்களுள் ஒன்று இனிப்பு 2024–25 இல் இந்தியாவின் இனிப்புச் சந்தை 37,900 கோடியைத் தொட்டிருக்கிறது; இது இன்னும் வளரும் என்கிறார்கள் மணி என்ற சுப்பிரமணியின் குடும்பத்துக் குத்துவிளக்குகள் அம்முவும் ஸ்ரீகலாவும் அன்புக்குரிய கண்மணிகள் பண்போடு வரவேற்றார்கள் ஓர் ஆலமரத்தின் எல்லாக் கிளைகளிலும் பழம் பழுக்கும் என்பதைப்போல பாம்பே ஸ்வீட்ஸின் எல்லாக் கிளைகளிலும் பணம் பழுக்க வாழ்த்தினேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.