வ.உ.சி. குறித்து அவதூறு பேசிய ஆ.ராசாவை முதல்வர் கண்டிக்காவிட்டால் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு கிடையாது…!
தமிழ்நாடு சோழிய வெள்ளாளர் சங்க தலைவர் டாக்டர் செந்தில் பேட்டி
தமிழ்நாடு சோழிய வெள்ளாளர் சங்கத்தின் தலைவர் டாக்டர் வி.ஜெ. செந்தில்பிள்ளை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சில நாட்களுக்கு முன்பு நாமக்கல்லில் நடந்த அரசியல் கூட்டத்தில் ஒட்டு மொத்த பிள்ளைமார் சமுதாயத்தையே இழிவுபடுத்தும் வகையில் தி.மு.க. எம்.பி. ஆ.ராசா ஒருமையில் பேசியுள்ளார். வ.உ.சி.யை நாங்கள் தெய்வமாக வணங்குகிறோம். ஆனால், சுதந்திர போராட்ட வீரரான வ.உ.சி., தனது மகனின் வேலைக்காக சிபாரிசு கடிதம் எழுதி பெரியாரிடம் கெஞ்சியதாக பேசியுள்ளார். இது, சுமார் 2½ கோடி பிள்ளைமார் சமுதாயத்தினருக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே, ஆ.ராசா தனது செயலுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும். எதிர்காலத்தில் இதுபோல் எந்த ஒரு சமுதாயத்தையும் குறிப்பிட்டு இழிவு படுத்தும் வகையில் பேசுவதை தடுக்க தங்கள் கட்சியினரை கண்டிக்க வேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சருக்கு கோரிக்கை விடுக்கிறோம். வருகிற 25-ந்தேதிக்குள் அவர் வருத்தம் தெரிவிக்கவில்லை என்றால், அடுத்த கட்ட நடவடிக்கையில் ஈடுபடுவோம். விரைவில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணவில்லை என்றால் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவை ஆதரிக்க மாட்டோம். அதன் விளைவை தேர்தலில் சந்திக்க நேரிடும். ராசாவை, முதல்-அமைச்சர் கண்டிக்கவில்லை என்றால் தேர்தல் பிரசாரம் செய்ய அந்த கட்சியினர் வரும் போது கருப்பு கொடி காட்டுவோம். கடந்த முறை எங்களுக்கு எதிராக அ.தி.மு.க. செயல்பட்டதால் ஆட்சியை இழந்தனர்.
இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது மாநில பொருளாளர் பேராசிரியர் மாணிக்கம், திருச்சி மாவட்ட அமைப்பாளர் திருநாவுக்கரசு , மாநில செயற்
குழு உறுப்பினர்கள், கே.பி. பழனிவேல், மகாலிங்கம், மாநில அமைப்பாளர்கள் டைமண்ட் பாலு, கங்கை மணி, குமரவிப் பிள்ளை, மாநில இளைஞர் அணி அமைப்பாளர் தங்கம் ரத்னகுமார், சேதுராமன், வ.உ.சி கண்ணன், மாவட்ட இணை அமைப்பாளர்கள் வி.கே. கோபி, ராமசந்திரன், மார்க்கெட் பகுதி முத்து, அமராவதி, தினேஷ், ராஜா, மாணிக்கம், உறையூர் பகுதி ராஜா, சரவணன், தில்லைநகர் பகுதி அப்பு, விக்கி, அசோக், மலைகோட்டை பகுதி ஸ்டாலின் ஆகியோர் உடன் இருந்தனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.