சுதந்திர போராட்ட வீரர், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழிகாட்டுதலின்படி, திருச்சி நீதிமன்றம் அருகில் அமைந்துள்ள வ.உ.சிதம்பரனார் திருஉருவச் சிலைக்கு கிழக்கு மாநகர கழக செயலாளர், மண்டல குழு தலைவர் மு.மதிவாணன் தலைமையில் சட்ட மன்ற உறுப்பினர் எஸ்.இனிகோ இருதயராஜ், கே.என்.சேகரன், ந.செந்தில், ஆகியோர் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மாநில, மாவட்ட, மாநகர, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட கழக செயலாளர்கள், நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
Comments are closed.